சுகாதார சேவை மற்றும் கல்வி சேவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சுகாதார சேவை மற்றும் கல்வி சேவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிப்பு!

சுகாதார சேவைகள் குழு மற்றும் கல்வி சேவைகள் குழுவிற்கு இன்று (02.11) முதல் அமுலுக்கு வரும் வகையில்  புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டு வருட காலத்திற்கு இந்த நியமனங்களை அரச சேவை ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அதன்படி, சுகாதார சேவைகள் குழுவின் தலைவராக டி.எம்.எல்.சி. சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி ஹப்புகொட மற்றும் நிமல் சரணதிஸ்ஸ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

ஆரம்ப தரத்திற்கு வைத்திய அதிகாரிகள், பல் வைத்திய அதிகாரிகள் மற்றும் ஆயுர்வேத வைத்திய உத்தியோகத்தர்களை நியமித்தல், சேவையை உறுதிப்படுத்துதல், வருடாந்த இடமாற்றங்களை மேற்கொள்வது மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட பல பணிகளை சுகாதார சேவை குழு மேற்கொள்கிறது.  

கல்விச் சேவைக் குழுவின் புதிய தலைவராக பொதுச் சேவை ஆணைக்குழு ஜே.ஏ. ரஞ்சித் குழுவின் மற்ற உறுப்பினர்களாக, எம்.என்.கே. வீரசிங்க மற்றும் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4