பிரபல தமிழ் நடிகர் ஜூனியர் பாலையா மரணம்

#India #Death #Actor #TamilCinema #Lanka4 #Tamilnews
Prasu
1 year ago
பிரபல தமிழ் நடிகர் ஜூனியர் பாலையா மரணம்

மூத்த நடிகரான ஜூனியர் பாலையா இன்று காலை தனது இல்லத்தில் உயிரிழந்தார். ஜூனியர் பாலையா தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக இருந்த பாலையாவின் மூன்றாவது மகன் ஆவார்.

தனது தந்தை போலவே உருவ அமைப்பு கொண்ட அவர் 1975ம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

 பாலையா எப்படி தனது தனித்துவமான உடல்மொழி, குரல் மொழி ஆகியவற்றை கொண்டிருந்தாரோ அதேபோல் ஜூனியர் பாலையாவும் கொண்டிருந்தார்.

மேல்நாட்டு மருமகளை தொடர்ந்து எமனுக்கு எமன், தூரம் அதிகமில்லை, அன்பே ஓடி வா, கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சின்ன தாயி, அம்மா வந்தாச்சு, ராசுக்குட்டி, சுந்தரகாண்டம், அமராவதி, பவித், வீட்ல விசேஷங்க, அவதாரம், புது நிலவு, வேட்டிய மடிச்சு கட்டு, பாரதி, ஜூலி கணபதி, ஜெயம், வின்னர், சாட்டை, கும்கி, தனி ஒருவன் என பல படங்களில் நடித்தார்.

கடைசியாக அவர் என்னங்க சார் உங்க சட்டம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் 2021ம் ஆண்டு வெளியானது.

ஜூனியர் பாலையா நடித்த படங்களில் கரகாட்டக்காரன் திரைப்படம் அவருக்கான தனி அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதிலும் கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடியில் ஜூனியர் பாலையா சொல்லும், 'அண்ணே என்னதான் இருந்தாலும் அவன் நம்ம செட்டு' என்ற வசனம் பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில், அவரின் இழப்பு சினிமாவுக்கு பேரிழப்பு. பலரும் ஜூனியர் பாலையாவுக்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!