பிரான்ஸ் சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறையால் கைதிகள் அவதி
#France
#Prison
#Lanka4
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
பிரான்சில் இடம்பற்றாக்குறை காரணமாக சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. பல சிறைச்சாலைகளில் கைதிகள் சுகாதாரமற்ற முறையில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
. பிரான்சில் தற்போது 74,342 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் மாத இறுதியில் 73,693 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர். ஒரு மாதத்தில் 649 கைகள் அதிகரித்துள்ளனர். ஆனால் பிரான்சில் 60,850 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ளன. 3,492 கைதிகள் மேலதிகமாக சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் சென்ற வருட இறுதி முதலே சிறைச்சாலை அளவை விட அதிக கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. பிரான்சில் 2027 ஆம் ஆண்டு 15,000 கைதிகள் சிறைவைக்கக்கூடிய சிறைச்சாலைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.