கனடாவின் டொரன்டோ பாடசாலைகளில் குண்டுப் புரளி. மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்

#Canada #Lanka4 #லங்கா4 #Bomb #Canada Tamil News #Tamil News #Threat
கனடாவின் டொரன்டோ பாடசாலைகளில் குண்டுப் புரளி. மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்

கனடாவின் டொரன்டோ நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பாடசாலைகளையும் போலீசார் சோதனையிட்டுள்ளனர்.

 இதன்போது குறித்த பாடசாலைகளில் எவ்வித குண்டு அச்சுறுத்தல்களும் கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டு தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்றதும் குறித்த பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்

images/content-image/1698924305.jpg

 பாடசாலை தொடர்பிலான அச்சுறுத்தல்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறான அச்சுறுத்தல்களை கருத்தில் கொள்ளாதிருக்க முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

 இதன் காரணமாகவே குறித்த மூன்று பாடசாலைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர். நம்பகமான தகவலா இல்லையா என்பதை விட இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது முதன்மையானது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!