மேஷ ராசியினருக்கு வெளிநாட்டு தொடர்புகளில் ஆதாயம் உண்டாகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
6 months ago
மேஷ ராசியினருக்கு வெளிநாட்டு தொடர்புகளில் ஆதாயம் உண்டாகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகி லாபம் காண்பீர்கள். நீண்டநாள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும். பரணி : செயலில் வேகம் இருக்கும். வருமானத்திற்கு வழி காண்பீர். வெளிநாட்டு தொடர்புகளில் ஆதாயம் உண்டாகும். கார்த்திகை 1 : வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை விலகும். நண்பர்கள் துணையுடன் லாபம் காண்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : வாகனம் வாங்க நீங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறும்.உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ரோகிணி : வர வேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மிருகசீரிடம் 1,2 : சுய தொழில் செய்து வருபவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : செயல்களில் குழப்பம் உண்டாகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். திருவாதிரை : யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் குழப்பம் ஏற்படும் கவனம் தேவை. புனர்பூசம் 1,2,3 : மற்றவர்கள் விஷயத்தில் இன்று தலையிட வேண்டாம். சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும்.

கடகம்

புனர்பூசம் 4 : எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வழக்கமான செயல்களிலும் பொறுமை அவசியம். பூசம் : பணியிடத்தில் வேலை பளு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். ஆயில்யம் : குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சிறு சலசலப்பு தோன்றி மறையும். அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மம்

மகம் : நேற்றைய எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் முயற்சியில் நன்மை உண்டாகும். பூரம் : திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை அடைவீர். தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். உத்திரம் 1 : பழைய கடன்கள் வசூலாகும். நிலப்பிரச்னை தீரும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர். வெளியூர் பயணம் ஆதாயமாகும். அஸ்தம் : உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும். வியாபாரத் தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். சித்திரை 1,2 : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். எதிர்ப்பு விலகும்.

துலாம்

சித்திரை 3,4 : குல தெய்வ அருள் உண்டு. புதிய சொத்து வாங்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும். சுவாதி : தடைபட்டிருந்த செயலை மீண்டும் தொடர்வீர். உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். விசாகம் 1,2,3 : வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றிபெறும்.

விருச்சிகம்

விசாகம் 4 : உங்கள் செயல்களில் கவனம் தேவை. குல தெய்வத்தை மனதில் எண்ணி செயல்பட முயற்சி பலிதமாகும். அனுஷம் : இனம் புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். பணவரவு இழுபறியாகும். கேட்டை : வாகனப்பயணத்தில் கவனமுடன் செயல்படுங்கள். உங்கள் முயற்சி இழுபறியாகும்.

தனுசு

மூலம் : உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும். பூராடம் : நீண்டநாள் முயற்சி இன்று பலன் தரும். தேவை பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். உத்திராடம் 1 : நீங்கள் எதிர்பார்த்த அனுகூலத்தை அடைவீர். தடைபட்டிருந்த வேலையை மீண்டும் தொடங்குவீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வீடு தேடி வரும். துணிச்சலுடன் செயல்படுவீர். திருவோணம் : நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த ஒரு முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : பொது நலனில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். வீண்விவகாரம் முடிவிற்கு வரும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : எதிர்பார்த்த நண்பர் குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர். பொருளாதார நெருக்கடி நீங்கும். சதயம் : உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர். சாமர்த்தியமாக நினைத்ததை நிறைவேற்றுவீர். பூரட்டாதி 1,2,3 : உறவினர்கள் ஆதரவுடன் ஒரு செயலை செய்து லாபம் காண்பீர். எதிர்ப்பு விலகும். தொழில் லாபமாகும். 

மீனம்

பூரட்டாதி 4 : வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர். செலவுகளின் வழியே உங்கள் விருப்பம் நிறைவேறும். உத்திரட்டாதி : உங்கள் நீண்டநாள் விருப்பம் இன்று நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். ரேவதி : நண்பர்களால் சங்கடம் தோன்றும். உங்கள் செயல் இழுபறியாகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.