சிம்ம ராசியினருக்கு புதிய முயற்சிகளால் சங்கடங்கள் உண்டாகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
6 months ago
சிம்ம ராசியினருக்கு புதிய முயற்சிகளால் சங்கடங்கள் உண்டாகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : பணியாளர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உதவியை எதிர்பார்த்து சிலர் உங்களை சந்திக்க வருவார்கள். பரணி : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்டிருந்த செயல் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1 : பிரபலங்களின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ரோகிணி : நிறைவேறாத முயற்சி ஒன்று நிறைவேறும். வழக்கில் உங்களுக்கு சாதகம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2 : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தடைபட்டிருந்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். திருவாதிரை : அருகிலிருந்து மறைமுகத் தொல்லை கொடுத்தவர் விலகுவர். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3 : நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்ததை இன்று அடைவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4 : மனதில் குழப்பம் அதிகரிக்கும். முக்கியமான ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுவீர். பூசம் : உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். தடைபட்டிருந்த செயல்களை முடித்து லாபம் காண்பீர். ஆயில்யம் : நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் அடைவீர். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம்

மகம் : திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். தக்க சமயத்தில் நண்பர் உதவி புரிவர். எதிர்பார்ப்பு நிறைவேறும். பூரம்: புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். உத்திரம் 1 : அலைச்சலும் செலவும் அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். வேலைக்கான முயற்சி வெற்றியாகும். அஸ்தம் : வராமல் இருந்த பணம் வரும். பொருளாதார சங்கடம் தீரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சித்திரை 1,2 : வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

துலாம்

சித்திரை 3,4 : செயல்களில் இருந்த தடை விலகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி : மற்றவர்களை அனுசரித்துச் சென்று ஆதாயம் அடைவீர். உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். விசாகம் 1,2,3 : வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். தொழிலை விரிவு செய்யும் சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : இரண்டு நாட்களாக இருந்த சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். அனுஷம் : உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர். கேட்டை : அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் விருப்பம் பலிதமாகும். சிந்தித்து செயல்படுவீர்.

தனுசு

மூலம் : உங்கள் செயல்களில் இழுபறியும், எதிர்பார்ப்பில் தடையும் உண்டாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பூராடம் : மனதில் குழப்பம் தோன்றும். எதிர்பார்ப்பு பெரும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். சிக்கல் தோன்றி மறையும். உத்திராடம் 1 : அலைச்சல் அதிகரிக்கும். செலவு செய்தும் உங்கள் முயற்சி நிறைவேறாமல் இழுபறியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : உங்கள் முயற்சியில் சாதகமான நிலை உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர். திருவோணம் : உங்கள் முயற்சி நிறைவேறும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் ஏற்படும்.வருமானம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : குடும்பத்தில் இருந்த சங்கடம் மறையும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் பெருகும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : சுறு சுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். சதயம் : மறைமுகமாக தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பூரட்டாதி 1,2,3 : இழுபறியாக இருந்த ஒரு முயற்சி முடிவிற்கு வரும். உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

மீனம்

பூரட்டாதி 4 : குடும்பத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். வெளிநாடு செல்வதற்காக முயற்சி வெற்றியாகும். உத்திரட்டாதி : அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். ரேவதி : பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசி தீர்ப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.