இலங்கையின் அபிவிருத்திக்கு தென்கொரியா துணைநிற்கும்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் அபிவிருத்திக்கு தென்கொரியா துணைநிற்கும்!

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். 

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரை முன்னிட்டு, இரு நாட்டு தலைவர்களும் நியூயோர்க்கில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், தென்கொரிய ஜனாதிபதி,  ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதிய விசேட கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்த கலந்துரையாடல்கள் உதவும் என தென்கொரிய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

கலந்துரையாடப்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தென்கொரிய ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

இலங்கை தொடர்பில் தென்கொரியா வழங்கிய தொழில் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் காலநிலை மாற்றத்தை தணிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதும் உள்ளடங்குவதாகவும் தென்கொரிய ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4