கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு!

#SriLanka #Colombo #water #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (04.11) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு 07.00 மணி முதல் நாளை (05.11) அதிகாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும். 

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக உரிய காலத்தில் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டமையினால் நீர் பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4