வரும் வருடம் பிரான்ஸின் சமூக நலக் கொடுப்பனவுகளில் மாற்றம்
சமூகநலக் கொடுப்பனவுகள் (allocations familiales) வரும் 2024 ஆம் ஆண்டில் பெரும் மாற்றங்களைச் சந்திக்க உள்ளது. இந்த கொடுப்பனவுகளை பெறுபவர்களில் பலர் மோசடியில் ஈடுபடுவதாலும், பொய்யான தகவல்களை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு, அதனை தடுத்து நிறுத்தும் முகமாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன.
அதேவேளை, கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவும் உள்ளன. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கொடுப்பனவுகள் அனைத்தும் 4.8% சதவீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளன.
வருடாந்த வருமானம் 75,804.98 யூரோக்களுக்கு மிகைப்படாதவர்கள் பெறும் மாதம் 141.99 யூரோக்கள் ஏப்ரல் மாதம் முதல் 148.80 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது. முன்று குழந்தைகளைக் கொண்டவர்கள் பெறும் 323.91 யூரோக்கள் பெறுபவர்கள் 339.43 யூரோக்களை பெற்றுக்கொள்வார்கள்.
அதேவேளை, சமூகநலக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டு நீண்டகாலமாக வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குறித்த பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அக்குடும்பங்கள் நீண்டகாலத்துக்கு கொடுப்பனவுகளைப் பெறமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.