துலா ராசியினருக்கு அறிவாற்றலால் வருமானம் அதிகரிக்கும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
6 months ago
துலா ராசியினருக்கு அறிவாற்றலால் வருமானம் அதிகரிக்கும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : புதிய முயற்சி வேண்டாம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. பரணி : நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் எண்ணம் நிறைவேறும்.கடவுள் வழிபாட்டால் நன்மைக் காண்பீர். கார்த்திகை 1 : உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர்கள் என்றாலும் சாதுர்யமாக அவற்றை சமாளிப்பீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். அந்நியர்களால் ஆதாயம் அதிகரிக்கும். ரோகிணி : நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். உங்கள் முயற்சி ஒன்று பலிதமாகும். மிருகசீரிடம் 1,2 : உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார். எண்ணம் இன்று நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : மற்றவரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவது நல்லது. திருவாதிரை : குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர். விமர்சனம் செய்தவர் இன்று உங்களைப் பாராட்டுவர். புனர்பூசம் 1,2,3 : வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். உடல்நிலையில் அக்கறை செலுத்துவது நல்லது.

கடகம்

புனர்பூசம் 4 : அக்கம் பக்கத்தினரிடம் அனுசரிப்பு தேவை. மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். பூசம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்ப பிரச்னைகளை பேசி தீர்ப்பீர். ஆயில்யம் : செயலில் இருந்த தடை விலகும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்.

சிம்மம்

மகம் : வீட்டில் உள்ள பழுதுகளை சரி செய்வீர். ஒரு சிலர் புதிய சொத்து வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர். பூரம் : அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு தோன்றும். சிந்தித்து செயல்படுவதால் சங்கடம் குறையும். உத்திரம் 1: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் முயற்சி வெற்றியாகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். அஸ்தம் : வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி தீரும். பழைய கடன்களை அடைப்பீர். சித்திரை 1,2 : வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவு செய்யும் எண்ணம் மேலோங்கும்.

துலாம்

சித்திரை 3,4 : வியாபாரத்தில் இருந்த தடை அகலும். முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்ய முன் வருவர். சுவாதி : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். விசாகம் 1,2,3 : தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். உங்கள் அறிவாற்றலால் வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் ஒரு செயல் சாதகமாகும். அனுஷம் : குலதெய்வ அருளினால் எண்ணம் நிறைவேறும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும். கேட்டை : திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். விருந்தினர் விரும்பி வருவார்கள்.

தனுசு

மூலம் : வெளியூர் பயணத்தால் சங்கடம் உண்டாகும். முயற்சி இழுபறியாகும். நெருக்கடி அதிகரிக்கும். பூராடம் : எதிர்பார்ப்பில் இழுபறி நிலை ஏற்படும். இயந்திரப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கவனம் அவசியம். உத்திராடம் 1: உங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும். வீண் பிரச்னை தோன்றக்கூடும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். நீங்கள் விரும்பியதை மற்றவருக்கு கொடுப்பீர்கள். திருவோணம் : வாழ்க்கைத் துணையால் உங்கள் செயல் வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : எதிரிகளால் உண்டான தொல்லை நீங்கும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் தேடி வருவர். சதயம் : திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். அறிமுகம் இல்லாதவரால் குடும்பத்தில் சங்கடம் தோன்றி மறையும். பூரட்டாதி 1,2,3: முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

பூரட்டாதி 4 : முன்னோர் வழிபாடு நன்மை தரும். பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். உத்திரட்டாதி : குடும்பத்தில் உண்டான பிரச்னையை சரி செய்வீர். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் சரியாகும். ரேவதி : உறவினர்கள் உங்களைத் தேடி வந்து உதவி கேட்பர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.