பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் : இவர்களை தெரிந்தால் அறிவிக்குமாறு வேண்டுகோள்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் : இவர்களை தெரிந்தால் அறிவிக்குமாறு வேண்டுகோள்!

பண மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் ஆண் மற்றும் பெண் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

பத்தரமுல்லை வீதியில் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தோட்டம் ஒன்றை புனரமைப்பதற்காக குறித்த சந்தேக நபர்கள் சொத்துக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளனர்.  

இந்த சந்தேகநபர்கள் பெற்றுக்கொண்ட மொத்த தொகை 9,943,108.03 ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

குறித்த பெறுமதிக்கு நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளாமல் இந்த சந்தேகநபர்கள் பண மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளதுடன், அதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

இந்த சந்தேகநபர்கள் இலக்கம் 31, 7, பபிலியான வீதி, நந்திமலை, தெஹிவளை என்ற முகவரியில் 'D marc solution (PVT) LTD' என்ற பெயரில் ஒப்பந்த நிறுவனத்தை நடத்தி வருவதுடன், அதன் உரிமையாளர்களாகவும் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர் 31 வயதுடைய விக்னேஸ்வரன் கணேசன் எனவும் மற்றவர் 36 வயதுடைய ரீவல் நிரோஷனி ராஜரத்தினம் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி - 071 - 8137373 அல்லது 011 2852556 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4