மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பலப் பிரதேசங்களில் இன்று (05.11) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திணைக்களத்தின் அறிவித்தலின்படி மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4