இலங்கை, இந்திய மீனவர்களின் மோதலுக்கும், அத்துமீறல்களுக்கும் இரு நாட்டின் கடல் கொள்ளையர்களே காரணம்!

#SriLanka #Article #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
5 months ago
இலங்கை, இந்திய மீனவர்களின் மோதலுக்கும், அத்துமீறல்களுக்கும் இரு நாட்டின் கடல் கொள்ளையர்களே காரணம்!

இலங்கை, இந்திய மீனவர்களின் மோதலுக்கும், அத்துமீறல்களுக்கும் இரு நாட்டின் கடல் கொள்ளையர்களே காரணம்.  தொடர்ந்தும் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் நடக்கும் மோதல் அதிகரித்து செல்கிறது.  இது மீனவர்கள் சிலர் அதிக மீன் பிடிக்கும் பேராசையில் மட்டுமல்ல மீனவர்கள் என்ற போர்வையில் பல கோடீஸ்வரர்கள் மீனவர்களுக்கு அதிக பணம் கொடுத்து இலங்கை மட்டுமல்ல இந்திய கடத்தல் தொழில் செய்யும் முதலைகளால் இயக்கப்படுகிறார்கள். 

இந்தியாவிலிருந்து கஞ்சா, அவின், ஐஸ் போதை, ஹெரோயின், மற்றும் மஞ்சள் போன்ற தட்டுப்பாடான விலை உயர்ந்த பொருட்களை கடத்துவதும், இலங்கையில் இருந்து தங்கம், மற்றும் பல தட்டுப்பாடான பொருட்களை கடத்துவதற்கும் உபயோகிக்கப்படுகிறார்கள். 

images/content-image/1699187753.jpg

இது சில கரையோர பாதுகாப்புப் படைகளின் ஆதரவோடும், கடற்படையின் ஆதரவோடும், சட்ட விரோதமாகவும் கடத்தப்படுகிறது. இந்த  கள்ளக் கடத்தலை செய்ய வறுமையில் வாழும் சில மீனவர்களையும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் கடத்தும் பொழுது கடற்படை பிடிக்க வரும் பொழுது கடலுக்குள் பொருட்களை போட்டுவிட்டு கைதாகி சில நாளோ, மாதங்களோ கழித்து விடுதலையாகிறார்கள்.  

இதற்கு உரிய தண்டனை இல்லாததால் மட்டுமே இது தொடர்கின்றது. மீனவர்கள் சிலர் அத்துமீறும்பொழுது இரு நாட்டு காவற்துறையால் கட்டுப்படுத்த முடியும். தங்கம் கடத்தும் பல கள்ளக் கடத்தல்காரர்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு கடத்துவதாகவும், அவ்வாறு கடத்தும் பொழுது மீனவர்கள் அல்லது படகு ஓட்டிச் செல்பவன் பொலிஸாரினால்  கூட்டோடு கொள்ளையடிப்பதும் சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களே. 

images/content-image/1699187777.jpg

 இந்தியாவிலிருந்து வரும் போதைப் பொருட்கள் அதிக அளவில் கொழும்புக்கு கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், சிங்கள பகுதியில் போதைப்பொருள் வியாபாரிகளால் விற்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. 

பொதுவாக பார்த்தால் இப் போதைப் பொருட்களால் பாதிக்கப்படுவது வெறும் இளைஞர்களும், யுவதிகளுமே. ஆம் கூறவேண்டியதை நாம் கூறியுள்ளோம் பொறுப்பானவர்கள் இதை கருத்தில் கொண்டு செயற்பட்டு போதையை ஒழிக்க முன் வரவும்.  பாராளுமன்றில்வெறும், கட்சி, இனம், மதத்துவேசம் பேசாமல் இப்படி மூவினத்துக்கும் தேவையான பாதுகாப்பை ஏற்படுத்த முன் வரவேண்டுமென கேட்கிறோம்..