தனுசு ராசியினருக்கு பயணங்களில் எச்சரிக்கை அவசியம் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
6 months ago
தனுசு ராசியினருக்கு பயணங்களில் எச்சரிக்கை அவசியம் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் அக்கறை காட்டுவீர். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பரணி : தள்ளிப்போன முயற்சி நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர்.எதிர்ப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். கார்த்திகை 1 : உங்கள் செயல்களில் குறை கூறியவர்கள் மாற்றம் அடைவர். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : முயற்சிகளுக்கு சூழல் சாதகமாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். ரோகிணி : திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். தொல்லை கொடுத்தவர் விலகுவர். மிருகசீரிடம் 1,2 : உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். நினைத்ததை சாதிப்பீர். வருமானத் தடை விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : துணிச்சலுடன் செயல்படுவீர். அந்நியரின் உதவியால் உங்கள் முயற்சி லாபமாகும். திருவாதிரை : வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவுக்கு வரும். புனர்பூசம் 1,2,3 : நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் செயல் லாபமாகும்.

கடகம்

புனர்பூசம் 4 : அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி நன்மையாகும். பிள்ளைகள் தேவையை நிறைவேற்றுவீர். பூசம் : சிக்கல்களை சந்தித்தாலும் உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஆயில்யம் : நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம்

மகம் : மதியம் வரை நெருக்கடி இருக்கும். தேவையற்ற செலவு தோன்றும். அதன்பின் நிலைமை சரியாகும். பூரம்: மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சி இழுபறியில் முடியும். பயணத்தில் சில சங்கடங்கள் தோன்றும். உத்திரம் 1 : செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர். எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாவீர்.சலசலப்பு தோன்றி மறையும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : வருமானத்தில் இருந்த தடை விலகும். அரசு வழி முயற்சி ஆதாயமாகும். எதிர்பார்த்த பணம் வரும். அஸ்தம் : வியாபாரத்தில் இருந்த தடை விலகும். இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். சித்திரை 1,2 : நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த முயற்சியில் சாதகம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4 : உற்சாகத்துடன் செயல்படுவீர். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். சுவாதி : வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விசாகம் 1,2,3 : அலுவலகத்தில் இருந்த பிரச்னை தீரும். நண்பர்கள் உதவியால் உங்கள் செயல் லாபமாகும்.

விருச்சிகம்

விசாகம் 4 : எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். தொழிலை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள். அனுஷம் : போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர். வெளியூர் பயணத்தை இன்று தவிர்ப்பது நல்லது. கேட்டை : உங்கள் முன்னேற்றத்தை தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்.

தனுசு

மூலம் : வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். மனம் மகிழும்படியான நிலை ஏற்படும். பூராடம் : அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும். நேற்றுவரை இருந்த பிரச்னை நீங்கும். உத்திராடம் 1 : எதிர்பாராத நெருக்கடிகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்ததை அடைவீர். வியாபாரத்தில் லாபம் தோன்றும். திருவோணம் : வியாபார பிரச்னை முடிவிற்கு வரும். பண வரவில் தடை ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். அவிட்டம் 1,2 : கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : தொழில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடியும். சதயம் : ஆரோக்கியம் சீராகும். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர் விலகிச் செல்வர். பூரட்டாதி 1,2,3 : வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உத்தியோகஸ்தர்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4 : பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உத்திரட்டாதி : அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஒதுங்கிச் செல்வார்கள். ரேவதி : உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும்.