இலங்கை கிரிகெட்டுக்கு இடைக்கால குழு நியமனம்!

#SriLanka #Lanka4 #Cricket #sports #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை கிரிகெட்டுக்கு இடைக்கால குழு நியமனம்!

விளையாட்டுத்துறை அமைச்சர்  ரொஷான் ரணசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி  7 பேர் கொண்ட குழு அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேவேளை இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (06.11) வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய இடைக்காலக் குழு அதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4