கொழும்பு - பதுளை வீதி இன்று வழமைக்கு திரும்பும்!

#SriLanka #Colombo #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு - பதுளை வீதி இன்று வழமைக்கு திரும்பும்!

கொழும்பு - பதுளை பிரதான வீதியின் பத்கொட பகுதியில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த வீதிப் பகுதி இன்று (06.10) காலை திருத்தியமைக்கப்படவுள்ளது. 

நேற்று (05.11) பிற்பகல் அப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக பத்கொட பிரதேசத்தின் வீதிப் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.  

எவ்வாறாயினும், நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நேற்றிரவு வீதி சீரமைப்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டதால், இன்று காலை இந்தப் பணியை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் மேற்பார்வையில், வீதி திருத்தப் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  

மேலும், பத்கொடவில் ஆபத்தான நிலையில் உள்ள 10 வீடுகளை கொண்ட பல குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4