ஜனாதிபதிக்கு அறிவிக்காது நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால குழு!

#SriLanka #Ranil wickremesinghe #Srilanka Cricket
PriyaRam
2 years ago
ஜனாதிபதிக்கு அறிவிக்காது நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால குழு!

 இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் புதிய இடைக்கால குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால குழு நியமிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

images/content-image/2023/10/1699254521.jpg

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று மாலை இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும் இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும்,  இதுவரை வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4