மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

#SriLanka #Mannar #Arrest #drugs #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

மன்னாரில் நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனை யில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரிடம் இருந்து போதைப் பொருளை கொள்வனவு செய்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐஸ் வகை போதை பொருள் நேற்று (06.11) மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மன்னார்,புதுக்குடியிருப்பு, எருக்கலம்பிட்டி,தாராபுரம் உட்பட்ட பல பகுதியில் நீண்ட காலமாக போதை பொருள் விற்பனையாளராகவும் விற்பனை முகவராகவும்செயற்பட்ட குறித்த நபர் மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் நேற்றைய தினம் (6.11) கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் தொடர்பில்  மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிக்கு  கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பாலவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத்தின் ஆலோசனையின் பெயரில் குற்றப்புலனாய்வு பிரிவு சார்ஜன் ரத்ண மனல தலைமையிலான குழுவினர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

images/content-image/1699322483.jpg

இந்நிலையில் சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்ய முயன்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31, மற்றும் 20 வயதுடைய நபர்கள் என்பதுடன் புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு அருகில் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரம் பிரதான சந்தேக நபருக்கு 1 கிலோ ஐஸ் போதை பொருள் விற்பனைக்காக வந்த நிலையில் 21 கிராம் போதைப்பொருளே தற்போது மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகுதி போதை பொருட்களை தேடும் நடவடிக்கையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4