கனடாவுடன் தொடர்புடைய மேலும் 75 பேர் காசாவிலிருந்து வெளியேறியுள்ளனர்
#Canada
#Lanka4
#மக்கள்
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
#Gaza
Mugunthan Mugunthan
2 years ago
காசாவில் இருந்து 75 கனடாவுடன் தொடர்புடையவர்கள் வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காசாவின் ராஃபா எல்லை வாயிலாக இந்த 75 பேரும் எகிப்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய வெளி விவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இன்றைய தினமும் அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் இந்தப் பாதையை பயன்படுத்தி காசாவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலஸ்தீன எல்லைப் பகுதியிலிருந்து கனடியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முதல் குழு பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் வெளியேற்றப்பட்டதாக கனடிய வெளி விவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.