நண்பர்கள் துணையுடன் முயற்சியில் வெற்றி காணும் விருச்சிக ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
6 months ago
நண்பர்கள் துணையுடன் முயற்சியில் வெற்றி காணும் விருச்சிக ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நீங்கள் எண்ணியது நிறைவேறும். முயற்சி லாபமாகும். தடைகளைக் கடந்து நினைத்ததை சாதிப்பீர்கள். பரணி : வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உங்கள் முயற்சியில் ஆதாயம் உண்டாகும். கார்த்திகை 1 : உங்கள் செயல் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : பூர்வீக சொத்தில் உண்டான பிரச்னைகளை பேசி தீர்ப்பீர். எதிர்பார்த்த வரவு வரும். ரோகிணி : பழைய செயல் ஒன்றில் இன்று லாபம் உண்டாகும். அரசு வழி முயற்சிகள் ஆதாயம் தரும். மிருகசீரிடம் 1,2 : மற்றவர் பலம் பலவீனம் தெரிந்து, செயல்பட்டு வெற்றி காண்பீர். வியாபாரத் தடை சரியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உங்களுக்கேற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். திருவாதிரை : வழக்கமான செயலில் தீவிரம் காட்டுவீர். பணியில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவீர். புனர்பூசம் 1,2,3 : பணி புரியும் இடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும்.வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4 : செயலில் கூடுதல் கவனம் செல்லும். தொழிலில் இருந்த தடை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். பூசம் : சிந்தித்து செயல்பட்டு நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். பயணத்தினால் ஆதாயம் உண்டு. ஆயில்யம் : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும்.

சிம்மம்

மகம் : வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். எதிர்பார்த்த வருவாய் வரும். பூரம் : தொழிலில் உண்டான போட்டியை சரி செய்வீர். உங்கள் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். . உத்திரம் 1 : செயலில் வேகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : பணி புரியும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணத் தட்டுப்பாடு நீங்கும். அஸ்தம் : முயற்சியில் இருந்த தடை நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும். சித்திரை 1,2: தொழிலில் உண்டான பிரச்னை தீரும். உங்கள் முயற்சி ஒன்று நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4 : வாகனத்தால் செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சுவாதி : மனதில் ஏற்பட்ட குழப்பத்தால் உங்கள் முயற்சியில் இழுபறி ஏற்படும். செயல்களில் கவனம் தேவை. விசாகம் 1,2,3 : வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். வராமல் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். அனுஷம் : நண்பர்கள் துணையுடன் முயற்சியில் வெற்றி காண்பீர். சிக்கல் தீரும். பிரச்னை முடிவிற்கு வரும். கேட்டை : நீங்கள் விரும்பியதை செய்து முடிப்பீர். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வரும்.

தனுசு

மூலம் : தொழிலில் உண்டான நஷ்டத்திற்கு தீர்வு காண்பீர். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும். பூராடம் : வேலைத்தேடியவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். உத்திராடம் 1 : ஒரு சிலருக்கு விரும்பிய மாற்றம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : தடைகளை விலக்கி உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். திருவோணம் : திட்டமிட்டபடி செயல்படுவீர். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். அவிட்டம் 1,2 : வியாபாரத்தில் சங்கடம் விலகும். தந்தை வழி உறவுகள் உதவியால் எண்ணம் நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். பயணத்தில் கவனம் தேவை. சதயம் : உங்களை சங்கடப் படுத்தும் வகையில் சில செயல் இன்று நடந்தேறும். பயணத்தில் விழிப்புணர்வு தேவை. பூரட்டாதி 1,2,3: குழப்பம் அதிகரிக்கும். பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது.

மீனம்

பூரட்டாதி 4 : செயல்களில் இருந்த சங்கடம் நீங்கும். தடைபட்டிருந்த முயற்சி நண்பர்கள் உதவியுடன் நடந்தேறும். உத்திரட்டாதி : நண்பர்கள் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ரேவதி : நீங்கள் செய்து வரும் தொழிலில் உண்டான பிரச்னை நீங்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.