ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும்: சுமந்திரன்

#SriLanka #Sri Lanka President #M. A. Sumanthiran
Mayoorikka
2 years ago
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும்: சுமந்திரன்

நாட்டின் பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசியலமைப்பை மீறியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

 புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதன்கிழமை(08) இடம்பெற்ற வாதப் பிரதிவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கருத்துக்குப் பின்னர் எழுந்த எம்.பி.யான விமல் வீரவன்ச, பதவிக்காலம் முடிந்த பொலிஸ்மா அதிபருக்கு தொடர்ந்தும் பதவி நீடிப்பு வழங்கப்படுகின்றது .

எனினும் இதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை. அதனால் பொலிஸ்மா அதிபரின் பதவி நீடிப்பு சட்ட ரீதியானது அல்ல. 

எனவே இது தொடர்பில் அரசு நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

 இதனிடையே எழுந்து எழுந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் ,சட்டத்தின் அடிப்படையில் தற்போது நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லை. 

அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறி பதவி முடிந்த பொலிஸ்மா அதிபருக்கு பதவி நீடிப்பை ஜனாதிபதி வழங்கி வருகின்றார்.

எனவே அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வரமுடியும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4