விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

#SriLanka #Sajith Premadasa #Samagi Jana Balawegaya #Minister #Cricket #sports #sri lanka tamil news
Prasu
2 years ago
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தம்முடன் இணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையை நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அதேவேளை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வந்த விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எனது பார்வையில் ரொஷான் ரணசிங்க ஒரு திருடன் இல்லை. 'நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். 

 அவர் என் பக்கத்தில் இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். எங்களுக்கு நேர்மையானவர்கள் வேண்டும். தூய்மையானவர்கள் வேண்டும்' எனவும் தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4