கனேடிய மக்கள் மறைந்த பிரித்தானிய மகாராணிக்கு சிலை எழுப்பியுள்ளனர்

#Canada #Lanka4 #Queen_Elizabeth #லங்கா4 #statue #Canada Tamil News #Tamil News
கனேடிய மக்கள் மறைந்த பிரித்தானிய மகாராணிக்கு சிலை எழுப்பியுள்ளனர்

கனடிய மக்கள் மறைந்த பிரித்தானிய மஹாராணியை கௌரவிக்கும் வகையில் சிலையொன்றை நிறுவியுள்ளனர். ஒன்றாரியோ சட்ட மன்றில் முன்னாள் மஹாராணியின் சிலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

 மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் இந்த சிலையை திறந்து வைத்துள்ளார். குயின்ஸ் பார்க்கில் அமைந்துள்ள சட்டமன்றில் இவ்வாறு மஹாராணியின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

images/content-image/1699520879.jpg

 மறைந்த பிரித்தானிய மஹாராணி, ஒன்றாரியோவின் வரலாற்றுக்கும் மரபுரிமைகளுக்கும் வழங்கிய பங்களிப்பினை போற்றும் வகையில் இந்த சிலை நிர்மானிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

 ஏழு தசாப்தங்களாக மஹாராணி மாகாண மக்களுக்கு சேவையாற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிலையை நிர்மானிப்பதற்காக சுமார் ஒன்று தசம் ஐந்து மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!