பிரான்ஸ் ஜனாதிபதி முதன் முறையாக இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதலுக்கு போர்நிறுத்த கருத்து
#France
#Attack
#Israel
#Lanka4
#President
#லங்கா4
#ஜனாதிபதி
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
#Hamas
Mugunthan Mugunthan
1 year ago

இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல் தொடர்பில் முதன்முறையாக ‘போர்நிறுத்தம்’ தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார்.
“"இன்று, நிலைமை தீவிரமாக உள்ளது மற்றும் ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வருகிறது!” என ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு, போர் நிறுத்தத்துக்காக நாம் இணைந்து செயற்படவேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
காஸா மீதான மனிதாபிமான மாநாடு தற்போது பரிசில் ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வின் போதே ஜனாதிபதி மக்ரோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுவரைகாலமும் ஜனாதிபதி மக்ரோன் போர் நிறுத்தம் தொடர்பாக கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்ல. முதன்முறையாக இன்று அது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



