கும்ப ராசியினருக்கு வெளியூர் பயணங்களில் விழிப்புணர்வு தேவை - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
6 months ago
கும்ப ராசியினருக்கு வெளியூர் பயணங்களில் விழிப்புணர்வு தேவை - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நினைத்ததை நடத்தி முடிப்பீர். புதிய முயற்சி வெற்றியாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பரணி : வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கார்த்திகை 1 : நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். வழக்கு சாதகமாகும். ரோகிணி : அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2 : நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றம் அடையும். திருவாதிரை : உங்கள் முயற்சியின் வழியே பலனை அடைவீர்கள். புதிய இடம் வாங்கும் செயல் வெற்றி பெறும். புனர்பூசம் 1,2,3 : செயல்களில் லாபம் காண்பதற்காக நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

கடகம்

புனர்பூசம் 4 : துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். ஆதாயம் அதிகரிக்கும். பூசம் : பொதுநல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். முடிவு உங்களுக்கு சாதகமாகும். மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர்கள். ஆயில்யம் : சகோதரர்கள் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். நீண்டநாள் வழக்கு சாதகமாகும்.

சிம்மம்

மகம் : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். பூரம் : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.

கன்னி

உத்திரம் 2,3,4 : மனம் சோர்வடையும். வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். அஸ்தம் : இழுபறியாக இருந்த உங்கள் செயல் பூர்த்தியாகும். நினைத்ததை இன்று அடைவீர்கள். சித்திரை 1,2 : தடைபட்டிருந்த வருவாய் வரும். மற்றவரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4 : வெளியூர் பயணமும் அலைச்சலும் ஏற்படும். முயற்சி தாமதமாகும். அவசர முடிவு எடுக்காதீர். சுவாதி : விரும்பிய செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். விசாகம் 1,2,3 : குடும்பத்தினருக்காக திடீர் செலவு தோன்றும். பொருளாதார நெருக்கடி ஏற்படும். போராடி சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4 : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அனுஷம் : சுய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவு உண்டாகும். கேட்டை : வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர். தொழிலில் இருந்த தடை விலகும். நெருக்கடி குறையும்.

தனுசு

மூலம் : வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். உங்கள் முயற்சி பலிதமாகும். பூராடம் : வழக்கமான வருமானம் தடையின்றி வரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி ஒரு சிலருக்கு நிறைவேறும். உத்திராடம் 1 : பணியாளர்களுக்கு அலுவலகத்தில் இருந்த சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். திருவோணம் : எந்த ஒன்றிலும் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பண வரவு திருப்தி தரும். அவிட்டம்1,2 : வியாபாரத்தில் இருந்த தடை விலகும். ஒரு சிலருக்கு இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : உடல்நிலையில் சில சங்கடம் தோன்றும். புதிய முயற்சி இன்று வேண்டாம். சதயம் : வெளியூர் பயணங்களில் விழிப்புணர்வு தேவை. உங்கள் எதிர்பார்ப்பு இன்று ஏமாற்றத்தில் முடியும். பூரட்டாதி 1,2,3 : உங்கள் முயற்சிகளில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். யாருக்கும் ஜாமீன் ஏற்க வேண்டாம். 

மீனம்

பூரட்டாதி 4 : உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும். உத்திரட்டாதி : குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். நிதி நிலை உயரும். ரேவதி : உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப பிரச்னை விலகும்.