தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கனடாவில் புதிய முத்திரை வெளியிடப்பட்டுள்ளது
#Canada
#Lanka4
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
#DIwali
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய தபால் முத்திரை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 12-ம் தேதி உலகம் முழுவதும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட தரப்பினர் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய தபால் திணைக்களம் தீபாவளிக்காக ஓர் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. இந்த தபால் முத்திரைகளை இணையவழியிலும் தபால் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி மரபினையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த தபால் முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



