மூன்று ராசியினருக்கு வருவாய் அதிகரிக்கும் , அதிலும் தனுசு ராசிக்காரர்களுக்கு - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
6 months ago
மூன்று ராசியினருக்கு வருவாய் அதிகரிக்கும் , அதிலும் தனுசு ராசிக்காரர்களுக்கு - ராசிபலன்

மேஷம்:

அசுவினி : திட்டமிட்டிருந்த செயல்களை நினைத்தபடி செய்து முடிப்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பரணி : முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வர். கார்த்திகை 1 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். கூட்டுத் தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். ரோகிணி : நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி ஆதாயம் அடைவீர்கள். மிருகசீரிடம் 1,2 : வியாபாரத்தை விருத்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். தடைபட்டிருந்த பணம் வரும்.

மிதுனம்: 

மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருவாதிரை : வியாபாரத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வீடு தேடி வரும். புனர்பூசம் 1,2,3 : இழுபறியாக இருந்த முயற்சி இன்று நடந்தேறும். தந்தை வழி சொத்தில் இருந்த பிரச்னை தீரும்.

கடகம்

புனர்பூசம் 4 : அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் முயற்சி வெற்றியாகும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி வரும். பூசம் : மாற்று இனத்தவர் உதவியுடன் தொழிலை விரிவு செய்வீர். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். ஆயில்யம் : வரவேண்டிய பணம் வரும். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும்.

சிம்மம்

மகம் : வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூரம் : பண வரவு திருப்தி தரும். விரும்பியவற்றை வாங்குவீர். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். உத்திரம் 1 : தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். உங்கள் செயலில் லாபம் உண்டாகும். 

கன்னி

உத்திரம் 2,3,4 : கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர் தேடி வருவர். மதியத்திற்கு மேல் லாபம் காண்பீர். அஸ்தம் : உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனக்குழப்பம் நீங்கும். சித்திரை 1,2 : தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். 

துலாம்

சித்திரை 3,4 : மதியம்வரை உங்கள் செயல்கள் இழுபறியாக இருந்தாலும் அதன்பின் உங்கள் எண்ணம் நிறைவேறும். சுவாதி: குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காக செலவுகள் ஏற்படும். குழப்பம் விலகும். விசாகம் 1,2,3 : உழைப்பு அதிகரிக்கும். குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்படுவதால் முயற்சி லாபமாகும். 

விருச்சிகம்

விசாகம் 4 : வரவேண்டிய பணம் வந்து சேரும். மதியத்திற்குமேல் எதிர்பாராத செலவு ஏற்படும். அனுஷம் : மதியம் வரையில் உங்கள் விருப்பம் நிறைவேறும். முயற்சி இழுபறியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். கேட்டை : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று முடிவிற்கு வரும். 

தனுசு

மூலம் : வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் எடுக்கும் முயற்சி லாபமாகும். வருவாய் அதிகரிக்கும். பூராடம் : நிதி நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் இன்று வரும். வியாபாரத்தில் இருந்த பிரச்னை தீரும். உத்திராடம் 1 : நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். செல்வாக்கு உயரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பகைவர்கள் விலகிச் செல்வர். திருவோணம்: உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு சிலர் விமர்சனம் செய்வார்கள். அதைப் பொருட்படுத்தாதீர். அவிட்டம் 1,2 : துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். சதயம் : புதிய முயற்சி நன்மையாகும். உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். பூரட்டாதி 1,2,3 : குடும்ப உறவுகள் ஒத்துழைப்புடன் மதியத்திற்குமேல் உங்கள் விருப்பம் நிறைவேறும். 

மீனம்

பூரட்டாதி 4 : மதியம் வரை நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் ஆதாயம் காண்பீர். விருப்பம் நிறைவேறும். உத்திரட்டாதி : மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். யாரிடமும் இன்று வீண் விவாதம் வேண்டாம். ரேவதி : புறம்பான செயல்களில் ஈடுபடுவோருக்கு சங்கடம் தோன்றும் என்பதால் நேர்வழியில் செல்வது நல்லது.