விமானத்திற்குள் காணப்பட்ட மர்மப் பொதியால் ஏற்பட்ட பதற்றம் - கட்டுநாயக்கவில் சம்பவம்!

#India #SriLanka #Katunayaka
PriyaRam
2 years ago
விமானத்திற்குள் காணப்பட்ட மர்மப் பொதியால் ஏற்பட்ட பதற்றம் - கட்டுநாயக்கவில் சம்பவம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற பொதி ஒன்று காணப்பட்டதை அடுத்து, விமானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 272 விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி நேற்று பிற்பகல்1.35 மணியளவில் பயணத்தை ஆரம்பித்தது.

விமான நிலையத்தின் ஓடு பாதையில் விமானம் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், விமானத்தின் கழிவறைக்குள், உரிமையாளர் இல்லாத சந்தேகத்திற்கிடமான பொதியொன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

விமானத்திற்குள் வெடி குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என எழுந்த சந்தேகத்தை அடுத்து, சென்னைக்கான பயணத்தை இடைநிறுத்தி, விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பான இடத்தை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.

images/content-image/2023/11/1699680982.jpg

விமானத்திலிருந்த பயணிகள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டதுடன், வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் விமானத்திற்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பொதி தொடர்பில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, பொதியிலிருந்து தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த பொதியிலிருந்து 2 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டதுடன், அவை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.

விமானம் முழுவதும் சோதனைக்குட்படுத்தப்பட்டதை அடுத்து, கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சென்னை நோக்கி மாலை 4.43 மணியளவில் விமானம் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4