பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு"
மாவீரர் பணிமனை பிரித்தானியாவின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் "மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு" நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாயக விடுதலைப் போரில் தங்கள் பிள்ளைகளையும், உடன் பிறந்தார்களையும், உறவுகளையும் தியாகம் செய்த மதிப்புக்குரியவர்களை மதிப்பளிக்கும் நாளாக இந்த நாள் தமிழீழ தேசிய தலைவரினால் தாயகத்தில் அடையாளப்படுத்தப்பட்டது.
இந்நாளினை மரபுகளுக்கு ஏற்ப நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தங்கள் உறவுகளை இழந்து நிற்கும் உறவுகளின் மனதுயரினை குறைப்பதற்கும், தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த இலட்சிய வீரர்களின் இலக்கினை நாம் அடைவோம் என்று உறவுகளுக்கு உறுதி அளிப்பதற்குமான நாளாக தாயகத்தில் இந்நாட்கள் கடைபிடிக்கப்பட்டது.
இவ்வாறான நிகழ்வுகளில், தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும் கலந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எதிர்வரும் 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாவீரர் குடும்பத்தினரையும் உரித்துடையோரையும் கலந்து கொள்ளுமாறு மாவீரர் பணிமனையினர் கேட்டுக் கொள்கின்றனர்.