மலரும் தீபத்திருநாள் தீபாவளி நாளுக்கான ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 months ago
மலரும் தீபத்திருநாள் தீபாவளி நாளுக்கான ராசிபலன்

மேஷம்

அசுவினி : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்டநாள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வரும். பரணி : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். கார்த்திகை 1 : குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்ப்பு விலகும். குடும்பத்தினர் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரோகிணி : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனக்குழப்பம் தீரும். முன்னோரை வழிபட்டு வளம் அடைவீர்கள். மிருகசீரிடம் 1,2 : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிரி விலகிச் செல்வர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்த வருவாய் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித் தீர்ப்பீர். திருவாதிரை : பணியாளர்கள் நலனில் அக்கறை செலுத்துவீர். வீடு தேடி வருவோர்க்கு உதவி செய்வீர். புனர்பூசம் 1,2,3 : முயற்சிகளில் இருந்த தடை விலகும். உங்கள் செயல் வெற்றியாகும்.

கடகம்

புனர்பூசம் 4 : உங்கள் செயல்களில் சில தடை ஏற்படும்.புறம்பான செயல்களில் ஈடுபடுவோரின் அமைதி கெடும். பூசம் : வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். கடும் போராட்டத்திற்குபின் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். ஆயில்யம் : தொழிலில் போட்டியை சந்திப்பீர் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்

மகம் : துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பூரம் : விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர். உத்திரம் 1 : மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து வெற்றி பெறுவீர். செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். செலவுகள் கட்டுப்படும். எதிர்பார்த்த வருமானம் வரும். அஸ்தம்: எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். வரவின் காரணமாக சேமிப்பு உயரும். சித்திரை 1,2: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதிநிலை உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4 : மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். நிதானத்துடன் செயல்படுவது நன்மையாகும். சுவாதி : செயல்களில் தடுமாற்றம் அடைவீர். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும். பயணத்தில் கவனம் தேவை. விசாகம் 1,2,3 : விலகிச் சென்ற உறவினர் உங்களைத் தேடி வந்து சமாதானம் பேசுவர். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

விசாகம் 4 : திடீர் செலவுகளால் சங்கடம் அடைவீர். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். அனுஷம் : உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும். கேட்டை : வாகனத்தில் செலவு உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். கவனமுடன் செயல்படுவீர்கள்.

தனுசு:

மூலம் : உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். வரவேண்டிய பணம் வீடு தேடி வரும். பூராடம்: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் செயல் நிறைவேறும். உத்திராடம் 1: பெரியோரின் ஆசீர்வாதம் உண்டு. எதிர்பார்த்த பணம் குடும்ப நெருக்கடிக்கு உதவும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : பங்கு தொழிலில் லாபம் காண்பீர்கள் பொதுச் செயலை முன்னின்று நடத்துவீர்கள். திருவோணம் : குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள் தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலிதமாகும். அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் நீங்கள் எதிர்பார்த்ததை இன்று அடைவீர். வருமானம் அதிகரிக்கும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : உங்கள் முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். சதயம் : செயல்களில் சிரமம் ஏற்பட்டாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். முன்னோரை வழிபடுவீர். பூரட்டாதி 1,2,3 : நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். ஒரு சிலர் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர். 

மீனம்

பூரட்டாதி 4 : மனதில் தேவையற்ற சங்கடம் தோன்றும். செயல்கள் தாமதமாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். உத்திரட்டாதி : வழக்கமான பணிகளில் இன்று கவனம் தேவை. வெடி வெடிப்பதில் எச்சரிக்கை அவசியம். ரேவதி : உங்கள் கவனக்குறைவால் இன்று சில சங்கடம்உண்டாகும். பயணத்தில் கூடுதல் கவனம் தேவை.