இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஒரு கொந்தளிப்பான தன்மை உருவாகியிருப்பதால், நாடு முழுவதும் இன்று (12.11) மழைப் பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது. 

நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் சில இடங்களில் 100 மி.மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4