பலரின் உண்மை முகம் அறியும் மிதுன ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 months ago
பலரின் உண்மை முகம் அறியும் மிதுன ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் உண்டாகும். இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. பரணி : முன்னோர் வழிபாட்டினால் வழக்கமான செயல்கள் வெற்றியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1 : குடும்பத்தில் நெருக்கடி குறையும். அடுத்தவரை நம்பி எந்த முயற்சியிலும் இன்று இறங்க வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரோகிணி : விரும்பிய வகையில் செயல்பட்டுவீர். நண்பர்கள் வழியே நன்மை அதிகரிக்கும். எதிரி பலம் இழப்பர். மிருகசீரிடம் 1,2: உங்கள் எண்ணம் நிறைவேறும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். நன்மை அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவடைவீர். திருவாதிரை : வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர்கள். வருமானத்தில் தடை அகலும். புனர்பூசம் 1,2,3: உண்மையானவர் யார் என்பதை தெரிந்து கொள்வீர். உங்கள் முயற்சி லாபமாகும்.

கடகம்

புனர்பூசம் 4 : அலைச்சல் அதிகரித்தாலும் வரவு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். பூசம் : உங்கள் முயற்சி அனுகூலமாகும். விலகிச்சென்ற உறவுகள் உங்கள் வீடு தேடி வருவர். ஆயில்யம் : வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தைக் அடைவீர். ஆடம்பர செலவு செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்

மகம் : உங்களுக்கு விருப்பமான ஒருவரை இன்று சந்திப்பீர். நினைத்ததை சாதிப்பீர். எதிர்கால சிந்தனை மேலோங்கும். பூரம் : வியாபாரத்தின் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். உத்திரம் 1 : உங்கள் தன்னம்பிக்கை பளிச்சிடும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்டநாள் முயற்சி முன்னேற்றமடையும். 

கன்னி

உத்திரம் 2,3,4 : சொத்துப் பிரச்னையை பேசி தீர்ப்பீர். நீங்கள் ஈடுபடும் செயல்கள் லாபமாகும்.பண வரவு திருப்தி தரும். அஸ்தம் : உங்கள் திறமை வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர். சித்திரை 1,2: எதிரிகளால் உண்டான நெருக்கடி அகலும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். 

துலாம்:

சித்திரை 3,4 : கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர் எதிர்பார்த்த வரவு வரும். சுவாதி : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும். விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். உறவினர் ஒருவர் உதவியுடன் எண்ணம் நிறைவேறும். 

விருச்சிகம்: 

விசாகம் 4 : உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அனுஷம் : ஒரு சிலர் உங்களைக் குறை சொல்லுவர். அமைதி காப்பதால் நன்மை உண்டு. கேட்டை : குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். விரும்பிய பொருட்கள் வாங்குவீர். செலவுகள் அதிகரிக்கும். 

தனுசு

மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். பூராடம் : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள். உத்திராடம் 1: கேளிக்கை, சந்தோஷம் என செலவு செய்வீர்கள். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திப்பீர். திருவோணம் : உங்கள் செயல்களை பிறர் பாராட்டுவார்கள். புதிய பொறுப்பு உங்களை வந்து சேரும். அவிட்டம் 1,2 : வியாபாரத்தை விருத்தி செய்ய முயற்சி மேற்கொள்வீர். குடும்பத்தினர் ஒத்துழைப்பு உண்டாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். சதயம் : வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். நண்பர்களுடன் ஒரு முயற்சி மேற்கொள்வீர். பூரட்டாதி 1,2,3 : மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். உறவினர் பக்கபலமாக இன்று பேசுவர். 

மீனம்

பூரட்டாதி 4 : நேற்றுவரை உங்கள் செயல்களில் இருந்த நெருக்கடி விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். உத்திரட்டாதி : நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். அக்கம் பக்கத்தினர் ஆதரவு அதிகரிக்கும். ரேவதி : மனதில் தேவையற்ற பயம் ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.