ரயில் பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Train #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ரயில் பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!

ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை நோக்கி பயணிக்கும் விரைவு புகையிரதமானது பொத்தளை நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. 

இதன் காரணமாக பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி விஜய ராஜதஹன நிலையத்தில் இருந்து காலை 7.14 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 45 நிமிடங்கள் தாமதமாfகியுள்ளது. 

அத்துடன் கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை, காலி மற்றும் மாத்தறைக்கு இயக்கப்படும் விரைவு ரயில் சுமார் 47 நிமிடங்கள் தாமதமாகும். மீரிகம புகையிரத நிலையத்தில் இருந்து காலை 7.52 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் பொல்கஹவெல சந்தியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு செல்லும் விரைவு ரயில் 46 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மீரிகம புகையிரத நிலையத்தில் இருந்து காலை 7.52 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மகாநுவரயிலிருந்து கொழும்பு கோட்டை, காலி மற்றும் மாத்தறை வரை செல்லும் அதிவேக ரயில்கள் மீரிகம புகையிரத நிலையத்தில் இன்று நிறுத்தப்படும் என்றும் பொல்கஹவெல சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் ரயில்கள் 45 நிமிடங்கள் தாமதமாக செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4