புதிய திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்ய அரச குழு ஒன்று நிறுவப்படும்

#SriLanka #Sri Lanka President #budget
Mayoorikka
2 years ago
புதிய திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்ய அரச குழு ஒன்று நிறுவப்படும்

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கு புதிய பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்யவும், புதிய திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யவும் அரச குழு ஒன்று நிறுவப்படும் என தெரிவித்தார்.

 அந்த கட்டமைப்புக்கு வெளியே எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. 2024 வரவு செலவுத்திட்ட மூலதனச் செலவுக்கான ஒதுக்கீடு ரூ.1260 பில்லியனாக அதிகரிப்பு.

 இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 4% ஆகும். பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை நிறைவு செய்ய 55 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு. அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக எதிர்பார்க்கும் நோக்கங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய 2024 முதல் ஒவ்வொரு அமைச்சிலும் விசேட பிரிவொன்று நிறுவப்படும்.

 சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்க 10 பில்லியன் ரூபாவும் இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீதிகளையும், பாலங்களையும் புனரமைக்க 2,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு. நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் குடிநீர் பிரச்சனைகள் இருப்பதால், பன்முகப்படுத்தப்பட்ட நிதியைப் பயன்படுத்தும் போதும், வெளிநாட்டு கடன் உதவிகளைப் பெறும்போதும் நீர் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4