₤600,000 யூரோக்கள் பெறுமதியான ஷம்பெயின் போத்தல்கள் கடத்தல் பிரான்ஸில் முறியடிப்பு
கனரக வாகனமொன்றில் ₤600,000 யூரோக்கள் மதிப்புள்ள மதுப்போத்தல்களை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை காலை இச்சம்பவம் 0Pontault-Combault (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பில் ஈடுபட காவல்துறையினர், இரு கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தினர். குறித்த இரு வாகனங்களுக் Reims (Marne) நகரில் உள்ள மதுபானச்சாலை ஒன்றில் இருந்து மது போத்தல்களுடன் திருடப்பட்ட வாகனங்களாகும்.
அதில் பொருத்தப்பட்டிருந்த GPS கருவி மூலம் குறித்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் குறித்த வாகங்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன. சில நிமிட துரத்தலின் பின்னர், வாகங்களை வீதிகளில் நிறுத்தி விட்டு இரு சாரதிகளும் தப்பி ஓடியுள்ளனர்.
வாகனங்களில் ₤600,000 யூரோக்கள் மதிப்புள்ள ஷம்பெயின் மதுப்போத்தல்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன. வாகனம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், சில நிமிடங்களில் கடத்தல்காரர்களும் தேடி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.