இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தில்  கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக வடக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இன்று (14.11) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும்  வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது.  

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்வுக்கூறுப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை,தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4