களுத்துறையில் வாள்வெட்டு சம்பவம் : தந்தையொருவருக்கு நேர்ந்த பரிதாப நிலைமை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
களுத்துறையில் வாள்வெட்டு சம்பவம் : தந்தையொருவருக்கு நேர்ந்த பரிதாப நிலைமை!

களுத்துறை நகரின் மையப்பகுதியில் நேற்று (13.11) பிற்பகல் நபர் ஒருவர் வாளால் தாக்கப்பட்ட நிலையில், களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இவர் தனியார் பேருந்தின் கண்டக்டராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 

வாள்வெட்டு தாக்குதலுக்கான காரணம் தெரியவரவில்லை எனவும், தாக்குதலுக்கு இலக்காகிய நபரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4