மலையகத்தில் வெடி வெடித்துக் கொண்டாடப்பட்ட வரவு செலவுத்திட்டம்!

#SriLanka #budget
PriyaRam
2 years ago
மலையகத்தில் வெடி வெடித்துக் கொண்டாடப்பட்ட வரவு செலவுத்திட்டம்!

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக, வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

வரவுசெலவு திட்டத்தில் மலையகத்துக்கென நிதி ஒதுக்கியமைக்காக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும், அதற்கான யோசனைகளை முன்வைத்த இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் மலையக மக்கள் இதன்போது நன்றி தெரிவித்தனர்.

அத்துடன் ‘ரணில் – ஜீவன்’ கூட்டணி மலையகத்தில் நிச்சயம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை வந்துள்ளது எனவும், மலையக மக்களும் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டுவருகின்றனர் என்பதற்கு இந்த வரவு – செலவுத் திட்டம் ஒரு சான்று எனவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4