மீன ராசியினர் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
5 months ago
மீன ராசியினர் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது - ராசிபலன்

மேஷம்

அசுவினி : குடும்பத்தில் இருந்த நெருக்கடி காணாமல் போகும். வருமானத்தில் இருந்த தடை விலகும். பரணி: இயந்திரப்பணியில் எச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் சில நெருக்கடி தோன்றி மறையும். கார்த்திகை 1: உங்களால் ஆதாயம் அடைந்தவர் இன்று உங்களைத் தேடிவந்து உதவி செய்வார்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: மனம் சொல்வதைக்கேட்டு செயல்படுவீர். நண்பர் உதவியால் நீங்கள் நினைத்தது நடந்தேறும். ரோகிணி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர். மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உதவியுடன் முயற்சி வெற்றியாகும். பயணத்தின் வழியே விருப்பம் நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: சொத்து விவகாரத்தைப் பேசி தீர்ப்பீர். நண்பர்களால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். திருவாதிரை: ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: எதிர்ப்பு விலகும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் லாபமாகும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.

கடகம்

புனர்பூசம் 4: நீங்கள் ஈடுபடும் வேலையில் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். எதிரி விலகுவர் ஆயில்யம்: உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்படுவீர். உழைப்பு அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும். குடும்பத் தேவை நிறைவேறும். பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர். அதிரடியாக ஒரு முயற்சியை மேற்கொள்வீர். உத்திரம் 1: வேலை பளு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி தள்ளிப்போகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். சகோதரர் வழியில் அனுகூலம் உண்டாகும். அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். குடும்ப பிரச்னை தீரும். சித்திரை 1,2: வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். வர வேண்டிய பணம் வரும். நிதிநிலை உயரும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும்.துணிச்சலுடன் செயல்பட்டு லாபமடைவீர். நல்ல தகவல் வரும். சுவாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை நண்பர்களுடன் சரி செய்வீர். வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த வருவாயை அடைவீர். நண்பர்கள் துணையுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்களால் ஒரு முயற்சி நிறைவேறும். அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். கேட்டை: பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் ஈடுபடுவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். செலவு அதிகரிக்கும். பூராடம்: செலவுகளால் மனதில் குழப்பம் தோன்றும். செயல்களில் எச்சரிக்கை அவசியம். உத்திராடம் 1: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். செலவுகள் வழியே பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மறைமுக எதிர்ப்பு தோன்றினாலும் அவற்றை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். திருவோணம்: தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வதால் குடும்பத்தில் நன்மை உண்டாகும். அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்று கூடுதல் வருமானம் உண்டாகும். உங்கள் தேவைகள் நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர். சதயம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். லாபம் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் வேகம் உண்டாகும். எதிர்பார்த்த ஒன்றில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

மீனம்

பூரட்டாதி 4: தொழிலில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். உத்திரட்டாதி: நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ரேவதி: எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.