இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பலப் பகுதிகளில் இன்று (15.11) இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திணைக்களத்தின் அறிவிப்பின்படி, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கிழக்கு மாகாணத்திலும், பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவுறுத்தியுள்ளது. 

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில்  அதிகபட்சமாக 50 மி.மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4