நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Journalist
Mayoorikka
2 years ago
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளீர்களா என கேள்விஎழுப்பிய பத்திரிகையாளரிடம் நான் என்னசெய்யவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள் என ஜனாதிபதி பதில் கேள்வி எழுப்பி சுவராஸ்யமாக உரையாடியுள்ளார்.

 கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கேள்வி ஜனாதிபதியானதும் நீங்கள் தனித்துவிட்டதாக தெரிவித்தீர்கள் - நாங்கள் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம் உங்களின் எதிர்கால திட்டங்கள் என்ன நீங்கள் மீண்டும் ஜனாதிபதியாவதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புகின்றீர்களா ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்தி அதன் சார்பில் போட்டியிடப்போகின்றீர்களா அல்லது கூட்டணியை ஏற்படுத்ப்போகின்றீர்களா?

 ரணில்- ஐக்கியதேசிய கட்சி அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவிரும்புகின்றது ஏன் என்றால் அவர்கள் மாத்திரமே உண்மையை பேசினார்கள் - தெரிவித்தார்கள் அதன் காரணமாகவே அவர்கள் அரசியலில் இருந்து அகற்றப்பட்டார்கள் -அதுவே அவர்களின் பலமான விடயமாக காணப்படப்போகின்றது.

 பல புதிய முகங்கள் உள்ளன அரசாங்கத்தில் எதிர்கட்சியில் உள்ள பலர் உள்ளனர் அவர்களும் போட்டியிடுவார்கள். நாங்கள் வங்குரோத்துநிலையை இல்லாமல் செய்வதே – அழிப்பதே எனது முதல் பணி .

 வங்குரோத்து நிலையை இல்லாமல் செய்ததும் நாங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம் அந்த தருணத்தில் என்ன செய்வது என்பதை நாங்கள் தீர்மானிக்கவேண்டும். வங்குரோத்து நிலையை ஒழிப்பதற்காக உங்கள் அனைவரினதும் ஆதரவை பெறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

 கேள்வி- உங்கள் திட்டங்கள் நோக்கங்கள் வெற்றிபெற்றால் நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா?

 ரணில்- நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள் நான் உங்களை கேட்கின்றேன்

 பதில்- நான் அதற்கு பதிலளித்தால் பல எதிர்வினைகள் வெளியாகலாம்.

 ரணில்- விடை என்ன?

 பதில்- ஏன் போட்டியிடக்கூடாது- ஏன் போட்டியிடக்கூடாது

 ரணில்- அப்படியானால் ஏன் மக்களிடமிருந்து எதிர்வினைகள் வெளியாகலாம் என தெரிவிக்கின்றீர்கள்?

 பதில்- நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை ஆனால் நான் உங்களின் தனிப்பட்ட திட்டங்கள் என்னவென்பதை அறியவிரும்புகின்றேன்

 பதில்- நான் அது முடிவடையும்வரை காத்திருப்பேன் என தெரிவித்தேன். பொருளாதார நிலைமைய சாதகமான விதத்தில் மாற்றியமைப்பதே எனது நோக்கம் நாங்கள் அந்த இலக்கை நெருங்கிவிட்டோம், நான் அரசியல் இல்லாமல் புதிய பொருளாதாரத்தை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன் - நாங்கள் அது குறித்து கலந்துரையாடுவோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4