சுவிற்சர்லாந்து பேர்ன் நகரில் நடைபெற்ற பல்சமய இரவு நிகழ்வு(புகைப்படங்கள்)
சுவிற்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பல்சமயங்களின் இரவு எனும் நிகழ்வு 11.11.2023 சனிக்கிழமை நடைபெற்றது. இம்முறை இந்நிகழ்வு உளநலம் குன்றியவர்களுக்கான «இன்சீம் » எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடாத்தப்பட்டது.
இப்பல்சமயங்களின் இரவு 15 ஆண்டுகளுக்கு தொடங்கப்பெற்றது முதல் சைவநெறிக்கூடம் பல்சமயங்களின் இரவு நிகழ்வில் தவறாது பங்கெடுத்து வருகின்றது. பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள 30 அமைப்புக்கள்கூடி நடாத்தும் பெருநிகழ்வாக இது தோற்றம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு மகிழ்ச்சியின் வேளைகள் எனும் தலைப்பு நிகழ்வுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. மகிழ்ச்சி இனம்பம் அனைவரும் வாழ்வில் தேவையானது, சமயங்கள் வாழ்வின் மகிழ்விற்கு பாதைகளை கோடிட்டுக் காட்டுகின்றனவா? மனித வாழ்வில் மகிழ்ச்சி மனப்பான்மையைக் வெளிக்காட்ட சமயங்கள் சமூகங்களுக்கு எவ்வாறு வழிசெய்கின்றது எனும் கேள்வியை முன்வைத்து நிகழ்வு நடாத்தப்பட்டது.
30 இடங்களில் இரு அமைப்புக்கள் அல்லது நிறுவனங்கள் இணைந்து 2 நிகழ்வுகள் எனும் முறையில் பல்சமய இரவு அமைக்கப்பட்டிருந்தது. சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்தின் உயர்கல்வி மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தலை சேவையாக வழங்கும் போறும் 3 எனும் தொண்டமைப்புடன் இணைந்து பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மேல் மண்டபத்தில் நிகிழ்வினை வழங்கி இருந்தது.
20.00 மணிக்கு சைவநெறிக்கூடத்தின் வரவேற்புடன் நிகழ்வு தொடங்கப்பெற்றது, 20.05 மணிக்கு தமிழ் செல்வங்களின் முருகப்பெருமான் பெருமை பேசும் நடனம் ஆற்றப்பட்டு மேடைவாத நிகழ்வு தொடங்கப்பெற்றது. பேராசிரியர் திரு. தொமாஸ் சுப்பாக் மேடையில் வாத நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.
சைவசமயத்தின்சார்பாளர்களாக மாணவிகள் செல்வி அபிராமி சுரேஸ்குமார், செல்வி மகிழினி சிவகீர்த்தி மேடைவாதநிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். உயர்கல்விபயிலும் செல்வி பியோனா, செல்வி மறியாம் ஆகிய இரு சுவிஸ் நாட்டவர்கள் கிறித்தசயத்தின் சார்பாளர்களாக நிகழ்வில் பங்கெடுத்தனர்.
உங்கள் சமயத்தில் மகிழ்வு என்ன, மகிழ்விற்கும் சமயத்திற்கும் தொடர்பு உள்ளதா, உங்கள் சமயம் உங்களுக்கு எத்தகைய மகிழ்வினை வழங்குகின்றது? இறைவனை மகிழ்விற்க என்ன செய்யலாம? இதுபோன்ற கேள்விகளை இரு சமயத்து மணவிகளிடமும் திரு. தொமாஸ் வினாவினார்.
இரு சமயத்து மாணவிகளும் தனித்தன்மையுடன் தமது பட்டறிவிலிருந்து பதில்களை வழங்கினர், பார்வையாளர்களுக்கு ஆர்வம் தூண்டுவதாக நிகழ்வு நடைபெற்றது. இதே நிகழ்வு மீண்டும் 21.30 மணிக்கு மீண்டும் மீள மேடை ஏற்றப்பட்டது.
தேநீரும் சிற்றுண்டிகளும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்டது.
நிறைவாக மீண்டும் மலைமகள் புகழ்பாடும் தமிழிசைநடனத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.