ரொஷான் ரணசிங்க மற்றும் குடும்பத்தினருக்கு உயிர் அச்சுறுத்தல்!

#SriLanka #Parliament #Srilanka Cricket
PriyaRam
2 years ago
ரொஷான் ரணசிங்க மற்றும் குடும்பத்தினருக்கு உயிர் அச்சுறுத்தல்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் நிறுவனத் தலைவர் சம்மி சில்வா தன்னை அச்சுறுத்தும் விதத்தில் கருத்துக்களை முன்வைத்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.

மேலும் தனது 13 வருட அரசியல் வாழக்கையில் யாரிடமும் எந்த கொடுக்கல் வாங்களில் ஈடுபடவில்லை, அரச செலவில் விமானத்தில் சென்றதில்லை, மானிய எரிபொருள் வாங்கியதில்லையென ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

images/content-image/2023/11/1700113495.jpg

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தோடு தனக்கும் தனது குடும்பத்திற்கும் உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் இதன்போது சபாநாயகரிடம் முறையிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4