கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கிய தீர்மானம்

#SriLanka #Sri Lanka President #Bank #money
Mayoorikka
2 years ago
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கிய தீர்மானம்

இலங்கை எடுத்துள்ள வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 4.2 பில்லியன் டொலர் சீனக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான நிபந்தனைகள் மற்ற கடன் வழங்குநர்களுடன் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா ஜப்பான் பிரான்ஸ் பரிஸ்கிளப் ஆகிய நாடுகளின் தலைமையிலான கடன்வழங்கும் நாடுகள் குழு இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான திட்டத்தைஎதிர்வரும் காலத்தில் முன்வைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 இதன்மூலம் இந்தவருட இறுதிக்குள் இலங்கைக்கான 330 பில்லியன் நிதி உதவிக்கு சர்வதேச நாணயநிதியம் அனுமதியளிக்கும் நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 சீனாவுடனான கடன்உடன்படிக்கையின் விபரங்களை நாங்கள் தற்போது இலங்கைக்கு கடன்வழங்கிய ஏனைய நாடுகளுக்கு அனுப்பியுள்ளோம் உத்தியோக கடன்வழங்குநர்கள் இதற்கு பதிலளிப்பார்கள் நாங்கள் அதனை தொடர்ந்து முன்னோக்கி நகரலாம் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.'

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4