துலா ராசியினருக்கு அறிமுகம் இல்லாதவர்களால் தீங்கு நிகழும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
5 months ago
துலா ராசியினருக்கு அறிமுகம் இல்லாதவர்களால் தீங்கு நிகழும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். தடைபட்டிருந்த வேலைகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பரணி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். கார்த்திகை 1: அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பண வரவில் இருந்த தடை விலகும். அலுவலகப் பணியில் கவனம் செலுத்துவது நன்மையாகும். ரோகிணி: நேற்றுவரை இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மிருகசீரிடம் 1,2: காலை வரை உங்கள் செயல்கள் இழுபறியாகும். அதன்பின் திட்டமிட்ட வேலைகள் வெற்றியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். யோசித்து செயல்பட வேண்டிய நாள். திருவாதிரை: அரசு வழியில் சில சங்கடங்கள் தோன்றும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

கடகம்

புனர்பூசம் 4: எதிர்வரும் பிரச்னைகளை முறியடித்து நினைத்ததை சாதிப்பீர்கள். பொருட்களின் சேர்க்கை உண்டாகும். பூசம்: பொருளாதார நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். ஆயில்யம்: பெரியோர்கள் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவதால் முயற்சியில் நன்மை உண்டாகும்.

சிம்மம்

மகம்: உடல்நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பூரம்: வழக்கு முடிவிற்கு வரும். பகைவர்கள் தொல்லை நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்திரம் 1: நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி வளர்ச்சி கூடும். பணியாளர் ஒத்துழைப்பார்கள். சித்திரை 1,2: நண்பர்கள் துணையுடன் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பெரியோர் ஆதரவு நன்மை தரும். 

துலாம்

சித்திரை 3,4: வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும். சுவாதி: அரசு வழியிலான முயற்சிகள் தள்ளிப்போகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். விசாகம் 1,2,3: பணியிடத்தில் கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்த செயலிலும் ஈடுபடாதீர்கள். 

விருச்சிகம்

விசாகம் 4: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். பயணத்தால் நன்மை உண்டு. அனுஷம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகள் உங்களை சரண் அடைவார்கள். கேட்டை: எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தினர் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். 

தனுசு: 

மூலம்: அரசு வழி முயற்சி இழுபறியாகும். அக்கம் பக்கத்தினருடன் சில பிரச்னைகள் ஏற்படும். பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உத்திராடம் 1: கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: உறவினர்களால் சில நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். திருவோணம்: உங்கள் அணுகுமுறையால் நன்மைகளை அடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். அவிட்டம் 1,2: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் இன்று வந்து சேரும். நெருக்கடிகள் தீரும். 

கும்பம்

அவிட்டம் 3,4: வங்கிப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவதால் நன்மை உண்டாகும். சதயம்: வாகனத்தை சரி செய்வீர்கள். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். பூரட்டாதி 1,2,3: வரவு இழுபறியாகும். பேச்சிலும் செயலிலும் கவனமாக செயல்படுங்கள். 

மீனம்

பூரட்டாதி 4: முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் சுமூகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ரேவதி: கேட்ட இடத்தில் இருந்து உதவி வந்து சேரும். வெளிநாடு செல்ல விரும்பியவர்களின் எண்ணம் நிறைவேறும்.