கோழி மற்றும் முட்டையின் விலை மேலும் குறைவடையும் சாத்தியம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கோழி மற்றும் முட்டையின் விலை மேலும் குறைவடையும் சாத்தியம்!

பண்டிகைக் காலத்தில் கோழிக்கறி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.  

வட்  வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்ததால் இந்நிலை மாறலாம் என அதன் தலைவர்  அஜித் குணசேகர தெரிவித்தார். 

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4