தாமரை கோபுரத்தில் 'பேஸ் ஜம்ப்' சாகச நிகழ்வு இன்று முதல் ஆரம்பம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தாமரை கோபுரத்தில் 'பேஸ் ஜம்ப்'  சாகச நிகழ்வு இன்று முதல் ஆரம்பம்!

கொழும்பு தாமரை கோபுரத்தில் 'பேஸ் ஜம்ப்' என்ற சாகச நிகழ்வு இன்று (18.11) முதல் ஆரம்பிக்கப்படும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

அதன்படி இன்றும்> நாளையும் (19.11) காலை 9 மணி முதல் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இதற்கான முன்னோடி நிகழ்வு நேற்று (17.11)  நடத்தப்பட்டது. இதில் 6 சர்வதேச பேஸ் ஜம்ப் வீரர்கள் கலந்துகொண்டு சாகச நிகழ்வை நடத்தினர்.  

தாமரை கோபுரத்தில் 29வது மாடியில் உள்ள கண்காணிப்பு தளத்தில் இருந்து பேஸ் ஜம்ப் வீரர்கள் சாகசத்தை ஆரம்பித்து கோபுரத்தின் வளாகத்தை அடைவார்கள்.  

தாமரை கோபுர நிர்வாகத்தினர் இந்த நிகழ்வை கண்டுகளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4