கனேடிய ஒன்ராரியோ ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது

#Canada #Lanka4 #Salary #லங்கா4 #Teacher #Canada Tamil News #Tamil News
கனேடிய ஒன்ராரியோ ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது

கனடாவில் ஒன்றாரியோ மாகாண ஆசிரியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விப் பணியாளர்களுக்கு இவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளது.

 இதன்படி பல்லாயிரக் கணக்கான கல்விப் பணியாளர்களின் சம்பளங்ளக் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கல்விப் பணியாளர்களின் சம்பளங்கள் தொடர்பில் மாகாண அரசாங்கம் பில்124 சட்டத்தினை அறிமுகம் செய்திருந்தது. இந்த சட்டத்திற்கு கல்விப் பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

images/content-image/1700295729.jpg

 இதனைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் குறித்த சட்டம் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டுக்கு தீர்வாக சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 சம்பள முரண்பாட்டை களையும் நோக்கில் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விப் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!