வடக்கில் கடற்தொழிலை விருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு!

#SriLanka #NorthernProvince #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வடக்கில் கடற்தொழிலை விருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு!

வடக்கின் கடற்றொழிலை மேலும் விருத்தி செய்கின்ற வகையில், வடக்கின் கடற்றொழில் தொடர்பிலான வசதிகளை மேற்கொள்வதற்கென 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நீர் வேளாண்மைக்கனெ 200 மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளதாக  கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “  இந்த நிதியனைக் கொண்டு நாம் வடக்கின் கடற்றொழில் துறையினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், அந்த முகாமைத்துவத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கும் தேவையான திட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

நாடளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பு, போசாக்கு உணவினை மேம்படுத்துதல், நன்னீர் நிலைகள் போன்ற அனைத்து நீர் நிலைகளையும் மேம்படுத்துவதற்கும் தயாராகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இவ்விடயங்கள் தொடர்பிலான விரிவான விளக்கங்களை கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான விவாத உரையின்போது தரலாம் என நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4