மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் காணிகள் அபகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

#SriLanka #Mannar #Lanka4 #Tamilnews
Thamilini
2 years ago
மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் காணிகள் அபகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  ஓலைத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவில் உள்ள தண்ணீர் பாலர் குடியிருப்பின் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான சுமார் 1531 ஏக்கர் காணியை மன்னார் புது குடியிருப்பைச் சேர்ந்த சிலர் அடாத்தாக பிடித்து வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.  

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல இடங்களில் காணி கொள்ளையில் ஈடுபட்டு வரும் அமானி என்பவர் உள்ளடங்களாக சுமார் 15 பேர் இவ்வாறு காணி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.  

images/content-image/1700368737.jpg

ஆயர் இல்லத்திற்குச் சொந்தமான குறித்த காணியை புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர்கள் அடாத்தாகப் பிடித்து அக்காணியை துப்புரவு செய்து எல்லையிட்டு சுற்று வேலி அடைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் ஐயர் இல்லத்தைச் சேர்ந்த அருத்தந்தையர்கள் சிலர் பல தடவை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. 

இதனால் கிராம மக்களுக்கும் காணி மோசடியில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கும் இடையில் தொடர்ந்தும் தர்க்க நிலை ஏற்பட்டு வருகின்றது. குறித்த காணி மோசடியில் ஈடுபட்டவர்களின் பின்னணியில் சிலர் உள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். 

images/content-image/1700368781.jpg

இவ்வாறு அடாத்தாக பிடிக்கப்படும் காணிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.இவ்விடயம் தொடர்பாக கிராம மக்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.  

மேலும் இப்பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுகின்றமையால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கால்நடைகளின் மேய்ச்சல் என்பன பாதிக்கப்படுகின்றன. எனவே மன்னார் அதிகாரிகள் துரித விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4